| வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன் தமிழே ஒளியே வாழி! Courtesy_ http://www.tamilkalanjiyam.com |
| “ | நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே ! உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! | ” |


